Categories
தேசிய செய்திகள்

#BREAKING : குஜராத்தில் டிச.,1 மற்றும் டிச.,5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்..!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18ஆம் தேதியுடன் குஜராத் நடப்பு சட்டமன்ற பதவிக்கால முடியும் நிலையில் புதிய தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை எப்போதும் போல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பை டெல்லியில் உள்ள ஆகாஷ் வாணி பவன் என்று சொல்லக்கூடிய ஆல் இந்தியா ரேடியாவின் வளாகத்தில் அறிவித்தார். பொதுவாக தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலோ, அல்லது வித்யாத் பவனிலோ இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இந்த நடைமுறை இன்று மாற்றப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மொத்த ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி, பெண் வாக்காளர்கள் 2.37 கோடி, 3ஆம் பாலினத்தவர்கள் 1,417 பேர். மொத்தம் குஜராத் தேர்தலில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்கள். மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் தேர்தலுக்காக 51,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும். குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றார்.

அதன்படி, குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல்கட்ட வேட்பு மனுதாக்கள் நவம்பர் 5ஆம் தேதிதொடங்கும் எனவும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கும் எனவும், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றார்.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு :

மனு தாக்கல் ஆரம்பம் நவம்பர் 5

மனு தாக்கல் முடிவு நவம்பர் 14

வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 15

வேட்புமனு திரும்ப பெற நவம்பர் 17

குஜராத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு :

மனு தாக்கல் ஆரம்பம் நவம்பர் 10

மனு தாக்கல் முடிவு நவம்பர் 17

வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 18

வேட்புமனு திரும்ப பெற நவம்பர் 21

ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12ஆம் தேதி வாக்குப்பதிவு, டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |