தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. அதனால் பள்ளியில் மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக பள்ளி வேலை நேரம் மாற்ற பள்ளிக்கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்படும் போது இந்த வேலை நேரம் மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை சிற்றுண்டிக்காக பள்ளி வேலை நேரத்தில் மாற்றுவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.