குஜராத் மாநிலம் சூரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்தது 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிடங்கு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்தது அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Categories
#BREAKING: காலையிலேயே பதற வைக்கும் சம்பவம்…. வாயு கசிந்து 6 பேர் பலி…. பரபரப்பு….!!!!
