தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ஆம் தேதி காலை( 36 மணி நேரத்தில்) வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எச்சரித்துள்ளது.