Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸிலிருந்து சமாஜ்வாதிக்கு தாவிய கபில்சிபல்…!!

அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கட்சியிலிருந்து விலகிய கபில்சிபல் உ.பி மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கபில்சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதியன்றே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில்சிபல் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 23 அதிருப்தி தலைவர்கள் இருந்த G23 குழுவின் அங்கமாக இருந்தார் கபில்சிபல்.

Categories

Tech |