கள்ளக்குறிச்சி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது .ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர்
ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை கேட்டு அந்த நீதிமன்றத்தில் உரிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.