கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு சீன தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார்.. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனி என்பவருக்கு டெல்லியில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் பெற்றார்..
அதேபோல சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்..