Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ”கறுப்பர் கூட்டம்”வீடியோ நீக்கம் – சைபர் கிரைம் அதிரடி ….!!

கறுப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள விடியோக்கள் நீக்கம் செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக கருப்பர் கூட்டம் இணைய தளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால் யாரும் பார்க்க முடியாத வகையில் இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த யூடுப் சேனலை  முடக்குவதற்காக யூடுப் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி பரிந்துரை செய்து இருக்கிறார்கள்.

Categories

Tech |