Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு…. ஒமைக்ரான் தொற்று உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில்  கர்நாடகாவில் மேலும் ஐந்து பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |