கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏன் விடுபட்டடு இருக்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்த கேள்வி முன்வைத்துள்ளார். தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா பகுதியாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் , கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடுபட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய முக.ஸ்டாலின் மேலும் இந்த சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் , நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டுமென்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.