கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார் .
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சினிமா அரசியல் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளித்து வருகிறார். கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் விக்ரம் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியம் மிக்க இந்திய கலர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்து வந்ததால், சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார்.