Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |