சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குப்பநத்தம் புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ஆம் தேதி உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டனர்.. மூக்கு காது வழியாக விஷயத்தை ஊற்றி 2 பேரையும் கொன்றதுடன் சடலங்களும் எரிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது..
ஆணவ கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த நிலையில் நீதிமன்றம் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.