Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: கண்கள் நோண்டி எடுப்பு… மெரினாவில் பெரும் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த மாதம் மெரினா கடற்கரையில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீக்கடையில் வேலை செய்பவர்கள் அசோக் சக்கரவர்த்தி, அவரது நண்பர் பெரிய பாண்டியன். அவர்கள் இருவரிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் தாயைப் பற்றி தவறாகப் பேசியதால் அசோக சக்கரவர்த்தியின் இரண்டு கண்களையும் பெரியபாண்டியன் நோண்டி எடுத்து விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |