புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.