Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் சேர்ப்பு …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அந்தஸ்து என்பது வழங்கப்பட வேண்டும், அவர்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்யுங்கள் அவர்களும் இந்தியர்களைப் போலவே சம அந்தஸ்தோடு வாழ தகுதி வாய்ந்தவர்கள் தான் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பினை அடிப்படையாக கொண்டுதான் தற்போது மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஒரு மிக முக்கியமான  வரைவை தயார் செய்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.இதனை அனுப்புவதற்கு முன்னதாக நேஷனல் எக்கனாமிக் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இது சம்பந்தமான ஆய்வுகளை, ஆலோசனைகளை மேற்கொண்டு யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்ற அடிப்படையில்தான் இந்த வரைவானது தற்போது மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவின் மீது மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அதற்கான ஒப்புதலை வழங்கி பின்னர் அதனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள். நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.

இது மூன்றாம் பாலினத்தவர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரைவு சட்டமாக மாறும் பட்சத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்களிலும் சரி, அரசு அலுவலகங்களிலும் சரி திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கியவர்களை மேல் தூக்கி விடுவதை தான்.  எனவே சமூகத்தில் அப்படியான பின்தங்கிய நிலையில் இருக்க கூடிய திருநங்கைகள் கைதூக்கி விடும் முயற்சியாக மத்திய அரசு இதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |