ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்
கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு வந்தனர்.. சில தயாரிப்பாளர்கள் நிறுவனங்களுடன் உடன்பட்டு வெளியிட்டு வந்தனர்.. அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தியேட்டர்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு முடிவு எடுத்துள்ளனர்..
அதாவது, ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.. திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகவும், படங்கள் ஒடிடி விற்பனைக்கான பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகளை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.