ஒமைக்ரான் கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 நெருங்குகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் “தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில், தற்போது 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒமைக்ரான் தொற்று சமுதாய தொற்றாக மாற வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நிச்சயம் இந்த தொற்று சமுதாய தொற்றாக மாறாது என்று கூறியுள்ளார்.