Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஏப்ரல் 6ஆம் தேதி முதல்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருகிறது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில், எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவாகும் என்று கூறினார்.

Categories

Tech |