Categories
மாநில செய்திகள்

BREAKING: ஏப்ரல் 17ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்கு ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் அன்று இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |