அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ் பி வேலுமணி ஊழல் விவகாரத்தில் ஒரே கணினியில் டெண்டர்களுக்கு விண்ணப்பித்தது அம்பலமாகியுள்ளது. டெண்டர் முறைகேடு ஒரே கணினி மட்டுமின்றி ஒரே செல்போன் எண்ணையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை வேலுமணி சகோதரர் 47 டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். எஸ்பி பில்டர் நிறுவனத்துக்கு கோவை மாநகராட்சியில் 131 டெண்டர்கள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.