தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. அதனால் தளர்வுகள் உடன் அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள தளர்வுகள் மட்டும் அப்படியே இருக்கும் என்றும், கூடுதல் தளர்வுகள் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உணவகங்கள், ஹோட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் இருந்தால் அபராதத்துடன் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.