Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உஷார்…! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…!!!

சென்னையில் இன்று திடீரென்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் மழை நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் கன முதல் மிகக்  கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |