Categories
மாநில செய்திகள்

BREAKING: உயரும் காய்கறி விலை…. பாதி விலைக்கு ரேஷன் கடைகளில்…. ஓபிஎஸ்…!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  நவீன் தக்காளி 85 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் 30 ரூபாய் முதல் 36 ரூபாய்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய் முதல்வ 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரட் 75 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 55 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளையும் நியாயவிலை கடைகளில் பாதி விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மளிகை பொருட்களை விட காய்கறிகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |