இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகே தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் காயமடைந்தார் .
மேலும் அவர்கள் மீனவர்களை துப்பாக்கியயை காட்டி மிரட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர் எனவும் படகு ஒன்றுக்கு 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.