Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இனி ஆளுநர் இல்லை…. நிறைவேறியது மசோதா …. தமிழக அரசு அதிரடி ..!!

பல்கலை கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் முடிவை மாநில அரசே எடுக்க  வேண்டும்.  வேந்தராக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். சட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அதை அறிவித்திருக்கிறார். குரல் வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதேபோல பாரதிய ஜனதா கட்சி இரண்டு பேருமே வெளிநடப்பு செய்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதேபோல வேறு சில மாநிலங்களிலும் இந்த  நடைமுறை இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் துணைவேந்தர் நியமிக்கக் கூடிய அதிகாரத்தை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்பதை உறுதி செய்வதற்கான  மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது.

Categories

Tech |