கரூரை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் பணி மகத்தான பணியாகும். வேறு எந்த பணிவுடனும் இதனை ஒப்பிட முடியாது.
அதன் காரணமாக போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி மூன்று ஷிப்ட்டுகளில் காவல்துறையினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும் மூன்று மாதத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் காவல்துறையினருக்கான ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.