Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்நாள் என் வாழ்வில் பொன்னாள் ….. ஸ்டாலின் ‘உருக்கம்’…..!!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் தந்தை பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தால் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது.

அது சிலரால் கடப்பாறையை கொண்டு இடிக்கப்பட்டது. அது சிலரால் கடப்பாறையை கொண்டு இடிக்கப்பட்டது. அப்போது கலைஞருக்கு கோபம் வரவில்லை. மாறாக கவிதை எழுதினார். என் உடன்பிறப்பே! செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும், அது அந்த சின்ன தம்பி என் முதுகில் குத்தவில்லை… நெஞ்சில்தான் குத்துகிறான்… அதனால் எனக்கு நிம்மதி.. வாழ்க..! வாழ்க..! என்று எழுதினார். என அந்த நிகழ்வை உருக்கத்துடன் முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

Categories

Tech |