Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த போட்டியில் வென்றால் அரசு வேலை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து பொங்கல் பண்டிகையான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இன்று மதுரை மாவட்டம் பாலமேடு பஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாடுபிடி வீரர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |