இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 4வது நாளும் ரசிகர்கள் கிண்டல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.