உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட் இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், ருத்ராட்ஜ் ஆகியோருக்கு தற்போது தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து பேரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டியன்ஸ் – இந்தியா இடையிலான தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.