Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.

அப்போது அதில் இருந்த ஒரு பயணி ஜன்னல் ஓரத்தில் இருந்து அதனை வீடியோ எடுத்துள்ளார். அதில் தீப்பொறிகள் இன்ஜின் பகுதியில் இருந்து காணப்பட்டது. அந்த விமானத்தை பொருத்தவரை 180 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு டெல்லியில் இருந்து மீண்டும் பெங்களூருக்கு புறப்படுவதற்கு தயார் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் இருக்கிறதா? இல்லை விமானியின் தவறால் ஏற்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |