சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
