Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு…!!!!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கூறியிருந்தது. முன்னதாக தமிழக அரசு பின் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகளுடன்  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி இருந்தனர்.

ஆனால் தற்போது பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும், மனித சங்கிலி பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக காவல்துறை அனுமதி  மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |