Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!!

 ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 2,050 பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |