Categories
மாநில செய்திகள்

Breaking: ஆன்லைன் வகுப்புக்கு… 5 நாட்கள் விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடைபெறாது என்றும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |