ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது நிதியரசர் சந்துரு குழு. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக முதல்வரிடம் அளித்தது. இதனை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த குழுவின் உடைய பரிந்துரையில் என்ன என்ன இருக்கின்றது என்றால்…? ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஏற்படுத்த்க்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை ஏற்பதாகவும், இவ்விளையாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த குழு கொடுத்திருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளை விளையாடுவதால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை மூலம் கொடுத்து இருக்கிறார்கள்.
எனவே இந்த இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் இன்றைக்கு மாலை நடைபெறக்கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அவசர சட்ட பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.