ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணம் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்குள்ள ஜங்காரெட்டிகுடம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இவ்வாறு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Categories
#BREAKING: ஆந்திராவில் துயரம்…. கள்ளச்சாராயத்தால் 18 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…..!!!!!
