Categories
உலக செய்திகள்

BREAKING: அமைச்சர்களுக்கு இனி சம்பளம் இல்லை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற உடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என கூறியுள்ளதை அடுத்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஒரு வருடத்திற்கு அமைச்சர்களுக்கு இனி சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |