Categories
தேசிய செய்திகள்

BREAKING : அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது….. குடியரசு தலைவர் வழங்கினார்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர தீரத்துடன் செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்..

எனினும் அபிநந்தனின் மிக் 21 ரக போர் விமானம் தாக்கப்பட்டு, பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.. அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சென்ற நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் இந்தியா வந்தார்.. இதனால் அபிநந்தன் மிகவும் பிரபலமானார்…

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர தீரத்துடன் செயல்பட்டதால் அவருக்கு ‘வீர் சக்ரா’ விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவித்தார். இது இராணுவத்தின் மூன்றாவது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |