Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு..!!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

சர்வேச போட்டியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா முதல் தரப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில்  சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். பிசிசிஐ UPCAC கிரிக்கெட் , சென்னை ஐ.பி.எல், சுக்லா ராஜீவ்
அய்யா மற்றும் எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்காத நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்..

Categories

Tech |