தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை தழுவியதால் எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இபிஎஸ் – ஓபிஎஸ் எச்சரித்துள்ளனர். அதிமுகவின் அரசியல் பயணம், கட்சி நிர்வாகத்தை விமர்சிப்பது, தேவையற்ற கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது என்றும் யாராவது அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.