தமிழகத்தில் அதிமுக கட்சியில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நடந்துமுடிந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதை தொடர்ந்து, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.