Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவில் தொடர் மோதல்….. EPS வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் தொடர்ந்து கட்சியில் உள்ள அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். இது ஜனநாயக நடைமுறை. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட குழுவால் தான் முடியும். கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொது குழுவுக்கே அதிகாரம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |