அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று ஓபிஎஸ்ஸை சந்தித்த பின் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் அளவிற்கு இந்த கட்சி பலம் பெறும்..
அதற்கு நானும் என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டுமோ நானும் செயல்பட ரெடியாகி இருக்கிறேன். முன்னாள் தலைவர் இருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருக்கும் போது, நான் அமெரிக்காவுக்கு போய் வந்தபின் அரசியல் மேடைகளில் முதல் முதலாக கலந்து கொண்டேன். இப்பொழுது மீண்டும் அவருடைய பெயரைக் காப்பாற்றுவதற்கு, கட்சியை காப்பாற்றுவதற்கு நானும் ஒரு சின்ன தொண்டனாக கீழே இருந்து எந்த அளவுக்கு வேலை பாக்க முடியுமோ அந்த அளவுக்கு பின்னால இருந்து என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்..
மேலும் அவர், இது எனக்கு ரொம்ப சந்தோசம், இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ஒன்னும் பேசவில்லை.. இதுதான் எப்படி எல்லாரும் ஒருங்கிணைந்து ஒண்ணா இருக்கணும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதே ஸ்டேண்ட் தான்.. அப்படியே இருக்கலாம், அதற்கு நானும் எந்த அளவுக்கு செயல்பட வேண்டுமோ செயல்பட ரெடியாகி இருக்கிறேன். எல்லாரும் நல்லபடியா ஒன்று சேருவாங்க கொஞ்சம் டைம் எடுக்கும் அவ்வளவுதான்..
அதிமுகவில் இருந்தவன் தான் நான்.. என்ன முறையாக இணையவில்லை இப்போ முறையாக இணைந்து செயல்படுவேன்.. அவ்வளவுதான், எல்லாரும் நல்லா இருக்கணும்.. கட்சி நல்ல பலம் பெறனும், அதனால முடிஞ்சா நேர்ல போய் கூட நான் சொல்லுவேன்.. முடிஞ்சா அவங்ககிட்ட அவங்களை நேரில் சந்தித்து நானும் ஒருங்கிணைத்துக்கொள்வதற்கு முயற்சிகளை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு அணியாக பிரிந்து நிற்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொது செயலாளர் பதவி செல்லாமல் போய்விட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி பரபரப்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் சென்று கொண்டே இருக்கும் நிலையில், பாக்யராஜ் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளது அரசியல் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.