இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் பொருளாதார சூழல் இன்னும் மோசமாகும். அடுத்த 2 நாட்களுக்கு, 10 – 12 மணி நேர மின்வெட்டு, இன்னும் அதிகமான எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.