இலங்கையில் ரயில்களை சரிசெய்யும் வரை சீன ரயில்களை ஓட்ட மாட்டோம் என்று என்ஜின் டிரைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கை அரசு சீனாவிலிருந்து ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த ரயில்கள்தரமற்றவை, பிரேக்குகள் கூட சரியில்லை என கூறி அதனை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சமீபகாலத்தில் 200க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகளை தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரயில் வண்டிகளை புறக்கணிப்பார்கள் என ரயில் இன்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட அறிவித்துள்ளார்.