Categories
உலக செய்திகள்

“உணவகத்திற்குள் அனுமதி இல்லை!”.. நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்..!!

பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் போல்சனாரோ, நியூயார்க் மாகாணத்திற்கு நேற்று சென்றிருக்கிறார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்கள் மட்டும் தான் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுவர். ஆனால் ஐ.நா சபை கூட்டத்தில் கலந்துகொள்ள தடைகள் இல்லை.

இந்நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பிரேசில் அதிபரை, உணவகத்திற்குள் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை. எனவே, நடுரோட்டில் நின்று கொண்டு அவர் பீட்சா சாப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |