Categories
உலக செய்திகள்

பிரேசிலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி..!!

ரஷ்யா தயாரித்த கொரோனாவிற்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பிரேசில் இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்று 1.68 கோடியாக இருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.7 லட்சமாக உள்ளது. உலக நாடுகளில் கொரனோ பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 2.27 கோடி நபர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரேசில், ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. எனவே உலக அளவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தேர்ந்தெடுத்த நாடுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது,

இதனைத்தொடர்ந்து பிரேசிலின் பல பகுதிகளில் இத்தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு, உபயோகிக்க உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கு எதிராக இத்தடுப்பூசி 91.6% திறனுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |