கனமழை மற்றும் நிலச்சரிவினால் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து குளம் போல் காட்சி அளிக்கின்றன. இந்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களில் மாட்டி கொண்ட மக்கள் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை மீட்க மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவால் போக்குவரத்து சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் கொட்டி தீர்த்து வரும் கனமழை பெரு வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.